"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
எப்போதும் அதே உணர்வு! கண்ட்ரோல் பண்ண முடியலையா? அப்போ இத படிங்க!
பொதுவாக பாலியல் சார்ந்த உணர்வுகள் அணைத்து உயிரினங்களுக்கும் வருவது இயல்பானது. ஆனால் அதில் மனிதன் மட்டும் சற்று வித்தியாசமானவன். மனிதனை தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் தங்களது இனப்பெருக்கத்திற்காக மட்டுமே பாலியல் உறவில் ஈடுபடுகிறது. ஆனால் மனிதன் மட்டும்தான் தனது தேவையை அடிக்கடி பூர்த்தி செய்துகொள்கிறான்.
சில சமயங்களில் நமக்கு அதிக அளவில் பாலியல் உணர்வுகள் எழும். அதை கட்டுப்படுத்தி முறையாக கையாள்பவன் தப்பித்து கொள்கிறான். ஆனால் சிலர் அதை அடக்க முடியாமலதான் பாலியல் தொல்லைகளில் ஈடுபடுகின்றனர். அதிலும் சிலர் சிறு குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் குழந்தைகளை கொடுமை செய்கின்றனர்.
சரி இத்தகைய உணர்வு வரும்போது நாம் என்ன செய்யவேண்டும்? அதை எப்படி முறையாக கையாள்வது என்று பார்க்கலாம் வாங்க.
1. மற்ற வேலைகளில் கவனம் செலுத்துதல்
பொதுவாக வேலை வெட்டி இல்லாமல், தனிமையில் இருக்கும்போதுதான் இத்தகைய உணர்வுகள் அதிகம் தோன்றும். எனவே அதுபோன்ற சமயங்களில் ஏதாவது ஒரு வெளியில் கவனம் செலுத்துங்கள்.
2. நண்பர்களுடன் உரையாடுதல்
இதுபோன்ற எண்ணங்கள் மேலோங்கும்போது உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் யாரிடமாவது பேசுங்கள். நேரில் பேச முடியாவிட்டாலும் தொலைபேசியில் பேசுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்கள் கவனம் அத்தகைய எண்ணத்தில் இருந்து விடுபடும்.
3. விளையாட்டு
உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடுங்கள். உங்கள் தொலைபேசியில் இருக்கும் விளையாட்டுகளை கூட நீங்கள் விளையாடலாம். அப்போது உங்கள் கவனம் மாறி அந்த எண்ணம் உங்களை விட்டு போய்விடும்.
4. சிறு குளியல்
பாலியல் எண்ணங்கள் தலைதூக்கும் போது சிறிதாக ஒரு குளியலை போடுங்கள். அது உங்கள் மனதை சாந்தப்படுத்துவதோடு அந்த எண்ணத்தை மறக்க செய்யவும் பெரிதும் உதவும்.
5. தொலைக்காட்சி
ஐயோ கட்டுப்படுத்த முடியவில்லையே என்று திணறும்போது ஏதாவது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை பாருங்கள். அன்பான பாடல்கள், நகைச்சுவை தொடர்கள் போன்றவற்றை மட்டும் பாருங்கள். காம உணர்வை தூண்டக்கூடிய நிகழ்ச்சிகளை பார்த்து விடாதீர்கள். அது இன்னும் ஆபத்தாகிவிடும்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் உங்கள் பாலியல் எண்ணத்தை குறைத்து உங்களை அதில் இருந்து வெளிக்கொண்டுவர உதவி செய்யும். மேலும் உங்களுக்கு தெரிந்த வழிகளையும் இங்கே கமெண்ட் செய்யுங்கள்.