மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முகத்தில் வரும் கரும்புள்ளிகளால் கவலையா! இதோ எளிமையான டிப்ஸ்
இன்று அதிகபடியான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று முகத்தில் தோன்றும் கரும்புள்ளிதான். இனி கரும்புள்ளியை நினைத்து கவலைகொள்ள வேண்டாம் .
எளிமையான டிப்ஸ் இதோ:
* சர்க்கரை மற்றும் எலுமிச்சை இரண்டையும் சேர்த்து முகத்தில் ஸ்க்ரப் செய்தால், முகத்தில் உள்ள துளைகள் சுத்தமாவதோடு சருமத்தின் நிறம் கூடும். மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றிவிடும்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை சாறு - 6 ஸ்பூன்
சர்க்கரை - 2 ஸ்பூன்
ஒரு பௌலில் சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தேய்த்து வட்டமாக மசாஜ் செய்யவும். சர்க்கரை கரையும் அளவிற்கு முகத்தில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்து முடித்த பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். கரும்புள்ளிகள் மற்றும் கருமை நிறம் மறைந்து முகம் பளிச்சிடும்.
* தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்க்ரப் முகத்தில் உள்ள வறண்ட செல்களை அகற்றி, சருமத்தை மென்மையாக்கிவிடும்.
தேங்காய் எண்ணெய் - 1/2 கப்
சர்க்கரை - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். இந்த ஸ்க்ரபை முகத்தில் 10 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்யவும். மசாஜ் செய்து முடித்தபின் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.