மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இதை செய்தால் முகப்பருக்கள் ஒரே வாரத்தில் மறைந்து விடும்!" முயற்சி செய்து பாருங்க!
இன்றைய காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் பெண்கள் என்று அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை முகப்பரு. இந்த முகப்பருக்களினால் முகத்தின் அழகே குறைந்து விடும். ரசாயனம் கலந்த கிரீம்களை உபயோகிப்பதால் பக்கவிளைவுகள் ஏற்படும்.
எனவே இந்த முகப்பருக்களை சரி செய்ய ரசாயனம் கலந்த கிரீம்களை உபயோகப்படுத்தாமல் இயற்கை முறையிலேயே இதை சரி செய்ய முடியும். அதிகளவு கோழி இறைச்சி மற்றும் துரித உணவுகள் உண்ணுதல், நெய், எண்ணெய் உணவுகளை அதிகம் உண்ணுவதால் முகப்பரு ஏற்படுகிறது.
இதைத் தடுக்க கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அடிக்கடி உண்ணவேண்டும். வேப்பங்கொழுந்தை அரைத்து முகத்தில் தடவி வரவேண்டும். எலுமிச்சை சாறு, பன்னீர் சம அளவில் கலந்து முகத்தில் தடவினால் முகப்பரு நீங்கும். அடிக்கடி முகத்தை கழுவுதல் வேண்டும்.
மேலும் தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். குறைந்தது 1 மணிநேரமாவது சூரிய வெளிச்சத்தில் நடக்க வேண்டும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவலாம். மேலும் ரோஜாப்பூ இதழ்களை தீயில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு பிரச்சனைகள் நாளடைவில் சரியாகும்.