தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இரவில் ஒருவேளை என நினைத்து உணவை தவிர்த்தால் பேராபத்து..! உச்சகட்ட எச்சரிக்கை..!!
இந்தியாவைப் பொருத்தமட்டில் 20 கோடி பேர் இரவு நேரத்தில் உணவு கிடைக்காமல் பட்டினியால் உறங்குகின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும், உணவு கிடைத்தாலும் அதனை சாப்பிட விரும்பாமலும், நேரமில்லாமலும் பசியுடன் பலரும் உறங்குகின்றன.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, ஒருவேளை சாப்பிடாமல் இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என நினைத்து இவ்வாறு செயலாற்றுகின்றனர். மாதத்தின் ஒருநாளோ அல்லது இரண்டு நாளோ ஒருவேளை பட்டினி இருந்தால் பரவாயில்லை.
மாதத்தில் பல நாட்களும் பசியுடன் உறங்குவது ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்குகளை விளைவிக்கும். மெலிந்த உடல் அமைப்பை பெற விரும்பும் நபர்கள் தினமும் 5 அல்லது 6 முறை உணவை பிரித்து உண்ண வேண்டும். இவ்வாறு சமமாக இடைவெளியில் உண்பது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
இரவு நேரத்தில் உணவை தவிர்த்தால் வளர்ச்சிதை மாற்றமும் மெதுவாகவே நடைபெறும். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுபொருட்கள் கிடைக்காமல் உடலில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். எந்தளவுக்கு உணவு உண்பதை குறைக்கிறோமோ அந்தளவுக்கு உடல் எடை குறையுமென்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது.
ஆரோக்கியமான உணவை தேவையான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க வழிவகுக்கும். இரவு நேரத்தில் உணவை தவிர்க்கும் பட்சத்தில் பசி அதிகரித்து காலையில் இரண்டு மடங்கு உணவு சாப்பிடுவார்கள். இதனால் உடலில் கொழுப்பு வந்து சேரும்.
சாப்பிடாமல் உறங்குவதால் உடலுக்கு சக்தி கிடைக்காமல் பாதிக்கப்படும். இரவு நேரத்தில் உணவை தவிர்த்தால் அது உடல் சோர்வுக்கு வழிவகை செய்யும். உடல் எடையை குறைக்க நினைத்து, இரவு உணவை தவிர்ப்பது மிகவும் ஆபத்தானது. இதனால் உடலின் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் பற்றாக்குறையும் ஏற்படும்.