மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா சமயத்தில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.?
நம் முன்னோர்கள் அந்த காலத்தில் பயன்படுத்திய சில மூலிகைகள் அனைத்துமே நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே பயன்படுகிறது. முன்னோர்கள் முந்தய காலத்தில் இயற்கை மூலிகைகளை மருந்தாக உன்னதால் தான் அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன் நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. அதனால் தான் கொரோனாவைப் பற்றி நிறைய செய்திகள் அதிகம் வந்துகொண்டே உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களைத் தான் கொரோனா அதிகம் பாதிக்கிறது என்று கூறப்படுகிறது, இதனால் நோய் எதிர்ப்பு சத்தியை எப்படி அதிகப்படுத்துவது என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழவகைகளை சாப்பிடலாம். ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள் மற்றும் கொய்யா, பப்பாளி, பேரிச்சை போன்றவை சாப்பிட்டால் சிறந்தது. நெல்லிக்காய், கீரை வகைகளை உட்கொள்ளவேண்டும். முடிந்த அளவு கடையில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்வது சிறந்தது.
கண்டிப்பாக இந்த சமயங்களில் மது, புகை பழக்கங்களை தவிர்த்து விடுங்கள். கொரோனா வைரஸ் நுரையீரலை தான் அதிகம் தாக்கும் என சிகிச்சையாளர்கள் கூறுவதால் நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும் புகைப்பழக்கத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். லேசாக சளி வருவது போல் தோன்றினாலே இரண்டு துளசி இலையை பறித்து சாப்பிடுங்கள் சரி ஆகிவிடும்.
இதில், மிக மிக முக்கியம் தற்போது, முக கவசம் அணிவதும், சமூக விலகலை கடைபிடிப்பதுமே ஆகும். அரசாங்கம் கொரோனாவை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும்.