35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
உங்க Password இந்த லிஸ்ட்ல இருக்கா?? 2021-ல் இந்தியாவில் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் "Password" இது தான்!!
இந்தியாவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் கடவுச்சொல் (Password) குறித்த பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது பிரபல நிறுவனம்.
தற்போது உள்ள இந்த டிஜிட்டல் உலகத்தில் பாஸ்வேர்ட் (Password) என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தப்பி தவறிகூட உங்கள் கடவுச்சொல்லை மற்றவர்கள் தெரிந்துகொண்டால் அது சில சமயங்களில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.
குறிப்பாக நீங்கள் வைத்திருக்கும் வங்கி கணக்குகளின் இணையதளத்தை பயன்படுத்தும் கடவுச்சொல்லை மற்றவர்கள் தெரிந்துகொண்டால் உங்களுக்கு பண இழப்பு ஏற்படும் அபாயம் உண்டு. உங்கள் சமூக வலைத்தளங்களின் கடவுச்சொல் தெரிந்துவிட்டால் அது மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்காகத்தான் அனைத்து இணையத்தளங்களும் மிகவும் கடினமான கடவுச்சொல்லை உருவாக்கும்படி கேட்கிறது. இருப்பினும் நம்மில் பலர் மிகவும் எளிமையான கடவுசொல்லைத்தான் இதுவரை பயன்படுத்திவருகின்றனர்.
இதுகுறித்து NordPass என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியர்கள் எந்த மாதிரியான கடவுச்சொல்லை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
1 . password
2 . 12345
3 . 123456
4 . 123456789
5 . 12345678
6 . 1234567890
7 . 1234567
8 . qwerty
9 . abc123
10 . india123
11 . xxx
12 . iloveyou
13 . krishna
14 . omsairam
இதுபோன்ற கடவுச்சொற்களைத்தான் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்களாம். இந்தியா முழுவதும் password என்பதையே பாஸ்வேர்ட்டாக சுமார் 1,714,646 பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. பலர் தங்கள் பெயரையே கடவுச்சொல்லாக பயன்படுத்தி வருவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.