திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பேருந்துக்காக காத்திருப்பது போல நடித்து, பேருந்து வந்ததும் ஓட்டம் - இன்ஸ்டா ரீல் படுவைரல்.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்.!
சமூக வலைத்தளத்தில் எப்போதும் புதுப்புது விஷயங்கள் அதிகளவில் ட்ரெண்டிங் ஆகும். இன்றைய இளம் தலைமுறையிடையே அதிகளவில் பகிர்வாகி வரும் விஷயங்களை, அவர்களும் செய்து விடியோவாக பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வீடியோ ஒன்று வைரலாகியது.
அந்த வீடியோவில், பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் குழுவை சேர்ந்த இளைஞர்கள், பேருந்து வந்ததும் அதில் பயணம் செய்வதைப்போல பாவனை செய்து பேருந்தை நிறுத்துகின்றனர். பேருந்து நின்றதும் அனைவரும் ஆங்காங்கே சிதறி ஓடுகின்றனர். பின்னர் பேருந்து புறப்பட்டு செல்கிறது.
இந்த விடீயோவின் மூலமாக இளைஞர்கள் தங்கள் இணையப்பக்கத்தில் லைக்குகளை பெற பதிவிடுகின்றனர் என்பது உறுதியாகிறது. இவர்களின் செயல் அவசர தேவைக்கு உதவி தேவைப்படும் நபர் பேருந்தை நிறுத்த முயற்சிக்கும் போது எங்கோ ஒரு சூழ்நிலையில் பலனின்றிப்போனால் என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதை யோசிக்கவே மனம் பதறுகிறது.
இணையஉலகில் தங்களின் செயல்பாடுகள் பலருக்கும் தெரியவேண்டும் என விரும்புவது அவரவரின் தனிக்குணம். அதை தவறு என்று உரைக்க இயலாது. ட்ரெண்டிங் ஆவதற்கு இவ்வாறான அற்பத்தனமான செயல்கள் தவிர்க்கப்படவேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.