காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
"ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கு இந்த தண்ணீர் தான் காரணமா.?"
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது தான் ஜப்பானியர்கள் பின்பற்றும் "வாட்டர் தெரபி". இதன்மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடிப்பது வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தும். எடை இழப்புக்கு உதவும். உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவும். உடலுக்கு அதிக ஆற்றலை அளிக்கும். மேலும் உடலில் நீரேற்றத்தைப் பராமரிக்க உதவும்.
மேலும் சிறுநீரகக் கற்கள், ஒற்றைத் தலைவலி, மலச்சிக்கல் ஆகியவற்றை தவிர்க்க உதவும். இந்த நீர் சிகிச்சையானது உடலின் ph அளவை சமநிலைப்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சிறுநீரகங்கள் தான் நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றன.
அதற்கு அதிகமான நீர் தேவைப்படுகிறது. ரத்தத்தில் இருந்து கழிவுகளை சிறுநீரகங்கள் தான் வடிகட்டி வெளியேற்றுகின்றன. அதே நேரம் அதிகளவிலான நீரேற்றமும் ஆபத்து தான். ஒவ்வொருவரும் தங்களது உடலுக்கு ஏற்ற அளவுக்கு நீரைக் குடிப்பது தான் நல்லது.