"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
சத்தான கருப்பு கவுனி அரிசியில், சுவையான அல்வா... வீட்டிலேயே செய்வது எப்படி?..!
அரிசி வகைகளில் மிகவும் சத்தானது கருப்பு கவுனி அரிசி தான். அதில் கருப்பட்டி சேர்த்து கருப்பு கவுனி அரிசி அல்வா எவ்வாறு சமைப்பது என்பது பற்றி தற்போது காண்போம்.
தேவையான பொருட்கள் :
கருப்பட்டி - 1கப்
நெய் - தேவைக்கேற்ப
முந்திரி -10
கருப்பட்டி - 1கப்
தேங்காய்ப்பால் - 1கப்
செய்முறை :
★முதலில் கருப்பு கவுனி அரிசியை முழுவதுமாக கழுவி 6 முதல் 7 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
★ பின் ஒரு கப் தேங்காய் பாலை ஊற்றி, இரண்டையும் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்
★அடுத்து ஒரு கிண்ணத்தில் அரைத்த மாவினை ஊற்றி, அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்க வேண்டும்.
★தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் கருப்பட்டியை போட்டு கலந்து வடிகட்டி எடுத்து வைக்கவேண்டும்.
★பின் ஒரு கனமான கடாயை அடுப்பில் வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு நறுக்கிய முந்திரியை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
★அடுத்து அதே கடாயில் வடிகட்டிய கருப்பட்டியை ஊற்றி, அவை நன்கு கொதித்தபின், கரைத்து வைத்த கவுனி அரிசி கலவையை சேர்த்து குறைந்த தீயில் கிளற வேண்டும்.
★இறுதியாக கலவை கெட்டியாகும் போது, 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறி, அல்வா பதம் வந்ததும் முந்திரியை போட்டு இறக்கினால் சுவையான கருப்பு கவுனி அரிசி அல்வா தயாராகிவிடும்.