53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
சுவையான மிகவும் சத்தான கோதுமை மாவு கருப்பட்டி தோசை எப்படி செய்வது தெரியுமா? இதோ அருமையான டிப்ஸ்...
சர்க்கரை கொண்டு நாம் சமைக்கும் உணவுகளை விட கருப்பட்டி கொண்டு நாம் சமைக்கும் உணவுகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு கோதுமை மாவு கருப்பட்டி தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு - ஒரு கப்
2. அரிசி மாவு - கால் கப்
3. கருப்பட்டி - அரை கப்
4. தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்
5. ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
6. நெய் - தேவையான அளவு
7. உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் சூடானதும் பின்னர் கருப்பட்டியை போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். பின்னர் அந்த கருப்பட்டி கரைசலில் இருந்து கல், மண் போக வடிகட்டி கரைசலை ஆறவிடவும்.
பின்னர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, கருப்பட்டி கரைசல், தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி, இருபுறம் நெய் விட்டு வேகவைத்து எடுத்தால் சூப்பரான, சுவையான மற்றும் சத்தான கோதுமை மாவு கருப்பட்டி தோசை ரெடி.