காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
"சமையலில் என்னென்ன செய்யலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!"
சமையலில் என்னென்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்று இங்கு பார்ப்போம். மாவை பிசைந்த உடனேயே பூரி சுட்டுவிட வேண்டும். குறைந்தது 2 மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊறவேண்டும். வாழைப்பூவை முதல் நாள் இரவே நறுக்கி தண்ணீரில் போட வேண்டும்.
காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பே தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். மஞ்சள் நிறமுள்ள மற்றும் ஓட்டைகள் உள்ள கீரைகளை வாங்க கூடாது. பனீர் தயாரிப்பதற்கு பாலைத் திரிக்க தயிர் ஊற்றலாம். கொதித்து ஆறிய பாலை பிரிட்ஜில் வைத்துவிட்டால், அதிகளவு பாலாடை கிடைக்கும்.
கருவேப்பிலை, கொத்தமல்லியை மஸ்லின் துணியில் சுற்றி பிரிட்ஜில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். பாகற்காய் குழம்பு செய்யும்போது சிறிது மாங்காய் துண்டுகளை சேர்த்தால் பாகற்காயின் கசப்பு தெரியாது. வற்றல் குழம்பு செய்யும்போது அதில் வெங்காய வடகத்தை வருத்துப் பொடித்துப் போடலாம்.
எந்த சூப் செய்தாலும் அதில் சோளமாவுக்கு பதிலாக ஒரு ஸ்பூன் அவலை வறுத்துப் பொடித்து சூப்பில் சேர்த்தால் சூப் மிகவும் கெட்டியாக இருக்கும். புதினாவை கசக்கி ஒரு மூலையில் வைத்தாலோ, காய்ந்த கருவேப்பிலையை கொளுத்தினாலோ ஈ, கொசு போன்றவை வராமல் தடுக்கலாம்.