மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வைரல் வீடியோ: மலைப்பாம்ப்பை கொத்தாக வேட்டையாடிய சிறுத்தை! பகீர் கிளப்பும் வீடியோ காட்சி.
சிறுத்தை ஒன்று மலைப்பாம்பை வேட்டையாடி உணாவுக்காக இழுத்துச்செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகவிருக்கிறது.
பொதுவாக மலைப்பாம்பு, சிறுத்தை இரண்டுமே மிகவும் கொடூரமானவை. தனது கண்ணில் சிக்கும் உணவுகளை அதன் உடலை சுற்றிவளைத்து, அதனை நொறுக்கி உணவாக உட்கொள்ளும் கொடிய பழக்கமுடையது மலைப்பாம்பு. அதேபோல் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடி உண்ணும் பழக்கம் கொண்டது சிறுத்தை.
இந்நிலையில் Nature is Scary என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் சிறுத்தை ஒன்று மலைப்பாம்புடன் சண்டையிட்டு அதனை உணவாக இழுத்து செல்கிறது. 49 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ காட்சியில், மலைப்பாம்பு ஒன்று அங்கே ஊர்ந்து செல்கிறது. முதலில் அதனை வேடிக்கை பார்க்கும் சிறுத்தை ஒன்று பின்னர் பாம்பின் முகத்திற்கு நேராக சென்று அதனுடன் சண்டை போடுகிறது.
பின்னர் பாம்பு அங்கிருந்து தப்பிக்க முயல்கிறது. ஆனால் பாம்பை பின்தொடர்ந்து மீண்டும் அதனுடன் சடையிட்டு பின் அதன் தலை பகுதியை கவ்விக்கொண்டு சிறுத்தை அங்கிருந்து நகர்கிறது. இந்த காட்சி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகிவருகிறது.
leopard attacks a python! 🐆🐍 pic.twitter.com/RCqM6SM9Xo
— Nature is Scary (@AmazingScaryVid) October 12, 2020