உதடுகள் அடிக்கடி வறட்சியடைகிறதா?.. காரணம் குறித்தும், தீர்வு குறித்தும் தெரிஞ்சுக்கலாம் வாங்க..! அருமையான தகவல்..!!



lips natural remedy

உதட்டில் வறட்சி காரணமாக ஏற்படும் வெடிப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து காணலாம்.

பெண்களின் அழகு எடுத்துக்காட்டுவதில் கண் மட்டுமல்லாமல் உதடும் முக்கிய பங்காற்றுகிறது. தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னதாக உதடுகளில் வெண்ணை தடவி வந்தால், உதடுகள் தானாக வறண்டு போவது நிற்கும்.

நம் உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு அல்லது அடிக்கடி காய்ந்து போவதற்கு காரணம் வெப்பநிலை உயர்ந்து விடுவது. இதனால் உதட்டை நாவினால் வருடி ஈரமாக்குவதை விட, உஷ்ணத்தை குறைக்கும் மோரை அடிக்கடி பருக வேண்டும்.

மேலும் வெண்ணெய் சிறிதளவு எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வருவதும் நல்லது. ஒவ்வொரு நாள் இரவும் வெண்ணெய் கொஞ்சம் உதட்டில் தடவிக் கொண்டு படுப்பதற்கு செல்வதன் மூலம் உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து, உதடுகள் வறண்டு போவது நிற்கும்.

lips

உதடு சொரசொரப்பாக இருந்தால் தேனுடன், சிறிதளவு சர்க்கரை சேர்த்து லேசாக தேய்த்தால் உதடு மிருதுவாகிவிடும். அத்துடன் தயிருடன், சிறிதளவு கடலை மாவு சேர்த்து முகத்தில் தடவிவர வெயிலினால் ஏற்படும் கருமை நீங்குவதுடன் எண்ணெய் பிசுபிசுப்பும் நீங்கும். 

இதனால் முகத்தில் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சியாக இருக்கும். புளித்த தயிரையும் வீணாக்காமல், மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவி வருவதால் அழுக்குகள் நீங்குவதுடன், எரிச்சல் நீங்கி உஷ்ணம் குறையும்.