62 நாட்கள் கோமா நிலையில் இருந்த ஒருவரை குணப்படுத்திய சிக்கன் துண்டு! வினோத சம்பவம்



Man wake up from coma after hearing favorite food chicken

கோமா நிலையில் இருந்த 18 வயது வாலிபர் ஒருவர் அவருக்கு பிடித்தமான சிக்கன் உணவு குறித்து கேட்டவுடன் கோமாவில் இருந்து எழுந்துள்ள சம்பவம் தற்போது வைரலாகிவருகிறது.

வடமேற்கு தைவானைச் சேர்ந்தவர் 18 வயதாகும் சியு. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் சியூவின் உள் உறுப்புகளில் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் ஆழ்ந்த கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சியூவை காப்பாற்ற மருத்துவர்கள் பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டனர். மருத்துவர்களின் முயற்சியில் சியு உயிர் பிழைத்தாலும் அவரால் கோமா நிலையில் இருந்து மீளமுடியவில்லை. இப்படியே அவர் 62 நாட்களாக தொடர்ந்து கோமாவில் இருந்துள்ளார். சியு மீண்டும் நினைவு பெற அவரது குடும்பத்தினர் அவருக்கு அருகிலையே அமர்ந்து அவரை கவனித்துக்கொண்டார்.

Viral News

அப்போது சியு வின் மூத்த சகோதரர் சியுவுக்கு பிடித்த சிக்கன் ஃபில்லட்டை (எலும்பு இல்லாத சிக்கன் துண்டு) தான் சாப்பிட போவதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவர் சிக்கன் குறித்து பேசிவந்தநிலையில் சியு வின் உடலில் அசைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது சகோதரர் சிக்கன் குறித்து அவரிடம் பேச்சுக்கொடுக்க இறுதியில் சியு சுயநினைவு பெற்று தற்போது பூரணகுணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதனை அடுத்து மீண்டும் மருத்துவமனைக்கு வந்த சியு, தனக்கு சிகிச்சை கொடுத்து தன்னை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு கேக் வழங்கி அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், கோமாவில் இருந்த ஒருவர் அவருக்கு பிடித்த உணவு பற்றி கேட்டதும் கோமாவில் இருந்து எழுந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.