இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொண்டை கடலை.! வேறு என்னென்ன நன்மைகளை தரும் தெரியுமா.!?



Many disease cured by eating chickpeas

பொதுவாக நம் வீடுகளில் சமைக்கும் உணவுகள் எப்போதும் ஊட்டச்சத்து மிகுந்ததாகவே இருந்து வருகிறது. குறிப்பாக நம் முன்னோர்கள் காலத்தில் தானியங்கள் என்பது மிகவும் ஊட்டச்சத்தானதாக கருதப்பட்டு வந்தது. இதனால் தினமும் உணவில் தானியங்களை பயன்படுத்தி உண்டு வந்தனர். இதனாலேயே அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாகவும் இருந்துள்ளனர்.

கொண்டைக்கடலை

இதில் குறிப்பாக கொண்டைக்கடலை மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த தானியமாக கருதப்பட்டு வருகிறது. கொண்டைக்கடலையில் கருப்பு கொண்டை கடலை, வெள்ளை கொண்டை கடலை என இரண்டு வகைகள் உள்ளன. இதில் கருப்பு கொண்டை கடலை புரதச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்ததாக கருதப்பட்டு வருகிறது. இந்த கருப்பு கொண்டை கடலை சாப்பிடுவதன் மூலம் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை குறித்து பார்க்கலாம்?

1. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவதை தடுக்கிறது.
2. ரத்தத்தில் உள்ள சிகப்பனுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
3. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
4. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் கருப்பு கொண்டைக்கடலையை சாப்பிடுவதன் மூலம் இரும்புச் சத்தை அதிகரிக்கிறது.
5. முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு, சருமம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்கிறது.
6. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனையை சரி செய்து மலச்சிக்கலை நீக்குகிறது.
7. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் கருப்பு கொண்டை கடலையை ஊறவைத்து பச்சையாக எடுத்துக் கொள்ளலாம்.

கொண்டைக்கடலை

இவ்வாறு அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு கொண்டை கடலையை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.