இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
அச்சச்சோ.. பகல்நேர தூக்கத்தில் இவ்வளவு ஆபத்தா?.. இனி அப்படி செய்யாதீங்க உஷாரா இருங்க..! அதிர்ச்சி உண்மை..!!
பகல் நேரத்தில் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து தற்போது காணலாம்.
தற்போதைய காலகட்டத்தில் இளைய சமுதாயத்தினர் இரவு நேரங்களில் வேலை செய்துவிட்டு, பகல் நேரங்களில் தூங்குவது மற்றும் பகல் நேரத்தில் 12 முதல் 14 மணி நேரம் வேலைசெய்துவிட்டு சரியாமல் தூங்காமல் இருப்பது என இருந்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்களது மூளை மற்றும் உடல் உறுப்புகள் அனைத்தும் சோர்வடையும்.
கிட்டத்தட்ட 24 மணிநேரம் கொண்ட ஒரு நாளில் 12 முதல் 14 மணிநேரம் வரை உழைப்பவர்கள் மூளைக்கு அதிக வேலையை கொடுக்கும் பணி செய்பவர்கள் ஆவார். இவர்கள் பகல் நேரத்தில் தூங்கலாம். ஆனால் அதிக நேரம் தூங்காமல் குட்டி தூக்கம் போடுவதன் மூலம் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். காலை எழுந்ததிலிருந்து மூளைக்கு தொடர்ச்சியாக வேலை கொடுப்பதன் மூலமாக மூளை சோர்வடைந்துவிடுகிறது.
இதனால் மூளையை ஆஸ்வாசப்படுத்த, குட்டி தூக்கம் போடுவதால் சுறுசுறுப்பை தருகிறது என பல ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலிஃபானிய பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டு நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட நபர்களை இரவு நேரங்களில் சிலரையும், பகல் நேரங்களில் சிலரையும் ஒன்றரை மணிநேரம் தூங்க வைத்தது.
இந்த ஆய்வின் முடிவில் இரவு நேரங்களில் தூங்கியவர்களை விட, பகல் நேரங்களில் தூங்கியவர்களின் மூளை செயல்பாடு திறன் வேகமாக இருந்தது. அவர்களது அறிவு திறன் அதிகமானதை கண்டு பகல்நேர குட்டி தூக்கம் குறித்து தொடர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. அப்போது மூளைக்கு மட்டுமல்ல, இதயத்துக்கும், உடலின் உள்ளுறுப்புகளுக்கும் பகல் நேர குட்டித் தூக்கம் மிகவும் நன்மையளிக்கிறது என்று நிரூபணமானது.
இரவு நேரம் தூங்கினாலும் பகல் முழுவதுமாக வேலை செய்வதால் இதயமும், மூளையும் களைப்படைகிறது. இதனை போக்கும் வகையில் ஒரு குட்டிதூக்கம் போட்டால் இதயத்துக்கும் ஆசுவாசமாக இருக்கும். மேலும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த அழுத்த நோயை உண்டாகும் வாய்ப்பை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு பிரச்சினைகளும் வராமல் தடுக்க இயலும்.
சுமை தூக்கும் தொழிலாளிகள், அதிகப்படியான உடல் உழைப்பு கொண்டவர்கள், உடல் வருத்தி வேலை செய்பவர்கள் மற்றும் ஓயாமல் வேலை செய்யும் இல்லத்தரசிகள் கூட பகலில் குட்டி தூக்கம் போடுவதால் மீதி நேரம் உற்சாகமாக இருக்க இயலும். இது குறித்த அனைத்து ஆய்வுகளும் பகல்நேரத்தில் தூங்குவது என்பது ஆரோக்கியமான நன்மைகளை கொண்டிருக்கிறது என்று தான் கூறுகிறது.
ஆனால் இரவு தூக்கம் போல, பகல் நேரத்தில் அதிகமாக தூங்கினால் உடல் ஆரோக்கியத்திற்கு கோளாறுகளை தரும். பகல் நேர குட்டி தூக்கம் என்பது குறைந்தது 15 நிமிடங்கள் தொடங்கி 45 நிமிடங்களுக்குள் முடிந்துவிட வேண்டும். பணியில் இருப்பவர்கள் தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது மேஜையில் கூட்டி தூக்கம் போட்டால் அடுத்த ஐந்து மணி நேரம் அவர்கள் பணியை தடையின்றி சுறுசுறுப்புடன் செய்ய இயலும்.
ஒருவேளை பகல் நேரத்தில் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் தூங்கினால் அது உடலுக்கு பலவிதமான கோளாறுகளை கொண்டு வந்து சேர்க்கும். இதனால் உடலில் சோம்பேறித்தனத்தை அதிகரிக்க செய்து மந்தமாக இருக்க வைக்கும். எனவே அளவோடு தூங்கி எழுந்தால் எப்பொழுதும் நலமோடு வாழலாம்.