வாவ்.. இது புதுசா இருக்கே.!! பருப்பு இல்லாமல் கமகமக்கும் சாம்பார்.!! சிம்பிள் ரெசிபி.!!



yummy-and-aroma-sambar-without-dhal-simple-recipe

பருப்பே இல்லாமல் சாம்பார் செய்ய முடியும் என்றால் நம்ப முடிகிறதா.? ஆம் பருப்பு இல்லாமல் சுவையான சாம்பார் எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். இதனை காலை அல்லது இரவு நேரத்தில் இட்லி மற்றும் தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட செம காம்போவாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

1 பெரிய வெங்காயம், 2 தக்காளி, 6 பச்சை மிளகாய் , மஞ்சள் தூள் சிறிது, தண்ணீர் 1 ½ கப், 1  டேபிள்ஸ்பூன் கடுகு , ½  டேபிள்ஸ்பூன் சீரகம், 2 வர மிளகாய், கறிவேப்பிலை  சிறிது, 2 கப் தண்ணீர், 1 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு, 3 டேபிள்ஸ்பூன் கடலை மாவு, பெருங்காயத் தூள் சிறிது, கொத்தமல்லி சிறிது.

Life style

செய்முறை

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய், சிறிது மஞ்சள் பொடி சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும். பின்பு மூன்று விசில் வரும் வரை குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். மூன்று விசில் வந்ததும் குக்கரை இறக்கி பிரஷரை ரிலீஸ் செய்துவிட்டு பார்த்தால் நாம் போட்டுள்ள பொருட்கள் நன்றாக வெந்து இருக்கும். பிறகு குக்கரில் உள்ள தண்ணீரை ஒரு பவுலில் வடிகட்டி விடுங்கள். பின் குக்கரில் மீதம் உள்ள பொருட்களை பருப்பு மத்தை வைத்து நன்றாக மசித்து விடவும். மசித்து விட்ட பின் வடிகட்டிய தண்ணீயை மறுபடியும் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: Mango recipe: 5 நிமிடத்தில் எளிதாக செய்யக்கூடிய மாங்காய் பச்சடி ட்ரை பண்ணி பாருங்க.!?

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு ஏறியதும் கடுகு, சீரகம், வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து குக்கரில் மசித்த பொருட்களை இதனுடன் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வைத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். கொதித்ததும் ஒரு பவுலில் கடலை மாவு எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். பின்பு இதையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். பின் சாம்பார் கட்டியாக வந்ததும் பெருங்காயத்தூள், நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் பருப்பே இல்லாமல் கம கமக்கும் சுவையான சாம்பார் ரெடி.

இதையும் படிங்க: கூந்தல் கருகருவென நீண்டு வளர கருவேப்பிலையை இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்க.!?