மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான அடுத்த நாளே கணவன் கண்முன்னே விபத்தில் உயிரைவிட்ட மணமகள்!
குஜராத்தில் கடந்த வியாழக்கிழமை திருமணம் முடித்த புதுமண தம்பதிகள் நேற்று வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் மணமகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தைச் சேர்ந்த சைட்டாலி ராணா (25) என்ற பெண்ணுக்கும் சைரகு ராணா (27) என்பவருக்கும் கடந்த வியாழக்கிழமை அன்று மாலை பார்டியில் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த அடுத்த நாளான நேற்று, வெள்ளிக்கிழமை புதுமண தம்பதிகள் தங்களுடைய குடும்பத்தினருடன் சூரத் - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுள்ளனர்.
புதுமணத் தம்பதிகள் தங்கள் குடும்பத்தை சேர்ந்த மேலும் 8 பேருடன் திருமணம் நடைபெற்ற பார்டி நகரத்திலிருந்து பில்லிமோராவிற்கு ஒரு சொகுசு காரில் சென்றுள்ளனர். அப்பொழுது அவர்கள் சென்ற கார் ஆனது வகள்தாரா என்ற இடத்தில் செல்லும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த காரானது சாலையில் எதிர்ப்புறத்தில் சென்று எதிரே வந்த ஒரு ட்ரக்கின் மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த புதிதாக திருமணமான மணப்பெண் உட்பட நான்கு பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் இதில் பலத்த காயமடைந்த மணமகன் உட்பட மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமணமான அடுத்த நாளே நடந்த இந்த சோகச் செய்தியைக் கேட்டு மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.