தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இளைஞர்களே உஷார்..!! Part-time job எனக்கூறி நூதன முறையில் மோசடி.! பணத்தை இழந்து தவிக்கும் இளைஞர்கள்.!
தற்போது ஆன்லைனில் வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்துள்ளது. தற்போது பலர் தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலைகளை முக்கிய வேலைவாய்ப்பு தளங்களில் தேடுகிறார்கள். மேலும் தங்களை பற்றிய விவரங்களை அதில் பதிவிட்டு வைத்துள்ளார்கள்.
இந்த தகவல்களை பார்க்கும் சிலர், அவர்களை தொடர்புகொண்டு ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கிறதே என்ற ஆசையில் சிறிய தொகை தானே அனுப்பிவிடுவோம் என்று பல இளைஞர்கள் ஏமார்ந்து வருகிறார்கள்.
குறிப்பாக, பார்ட் டைம் ஜாப் எனக்கூறி வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம், மாதம் எட்டாயிரத்திற்கும் மேலும் வருமானம் கிடைக்கும் என செல்போனுக்கு குறுந்தகவல்கள் அனுப்புகின்றனர். இதனை நம்பி இளைஞர்கள் அவர்கள் சொல்லும் இணையத்தளத்திற்கு சென்று, அவர்களது தகவல்களை பதிவிட்டு, பின்னர் அவர்கள் கேட்கும் தொகையையும் செலுத்தி ஏமாறுகின்றனர்.
அதிலும் சில ஏமாற்று பேர்வழிகள், ஒரு சில நபர்களின் வங்கிக் கணக்கில் அதிகப் பணம் இருப்பதை அறிந்து, அவர்கள் அனுப்பும் பணத்தை இரட்டிப்பாக்க கொடுக்கின்றனர். இதனை பார்த்து பேராசை கொண்ட அந்த இளைஞர்களும், மேலும் அதிக பணத்தை இன்வெஸ்ட்மெண்ட் செய்தால் நமது பணம் குறுகிய காலத்தில் பெருகி விடும் என ஆசைப்பட்டு பெரும் தொகையை அவர்களிடம் கொடுத்து ஏமாந்து விடுகின்றனர்.
எனவே தற்போதைய சூழ்நிலையில் பார்ட் டைம் ஜாப் எனக் கூறி, நீங்கள் சிறிய தொகையை செலுத்த வேண்டும் என கூறினால் தயவு செய்து அவர்களை தவிர்த்து விடுங்கள். தற்போது இணையத்தில் மோசடி மிக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆரம்பத்தில் படித்த இளைஞர்களிடமே உங்களது ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டை ரெனிவல் செய்ய வேண்டும் என கூறி அவர்களிடம் உள்ள தகவல்களை கேட்டு அவர்களது வங்கி கணக்கில் உள்ள தொகைய அபேஸ் செய்து வந்தனர். தற்போது பலரும் உஷார் ஆனதால், கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் தொடர்பு கொண்டு நாங்கள் பேங்க் மேனேஜர் பேசுகிறோம். உங்களது ஏடிஎம் கார்டு காலாவதியாக போகிறது எனக் கூறி அவர்களிடம் கார்டு எண் மற்றும் ஓடிபி உள்ளிட்டவையை பெற்று, வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபேஸ் செய்கின்றனர். எனவே பொதுமக்கள் அனைவரும் மிகவும் உஷாராக இருங்கள்.