53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
தித்திக்கும் சமையல்..! பொரி மீந்துபோச்சா?.. கவலை வேண்டாம்., சுவையான பொரி அல்வா செய்வது எப்படி?..!
பண்டிகை காலங்களில் பெரும்பாலும் வாங்கும் பொரி, எப்போதும் மீதம் இருக்கும். அதனை வீணாக குப்பையில் போடுவதற்கு பதில், அதில் சுவையான அல்வா தயாரித்து சாப்பிடலாம்.
பொரி அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி பொரி - 4 கிண்ணம்,
வெல்லம் - 4 கிண்ணம்,
கலர் பொடி (தேவைப்படுவோர் உபயோகம் செய்க) - 2 சிட்டிகை,
நெய் - 5 கரண்டி,
முந்திரி - 12,
உலர் திராட்சை - 6,
ஏலக்காய் பொடி - 1/4 கரண்டி,
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட பொரியை மூல்கும் அளவு நீர் ஊற்றி 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின் அரிசிப்பொரியை தண்ணீர் இன்றி பிழிந்து எடுத்து, மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மறுபுறம் வெல்லத்துடன் கால் கிண்ணம் நீரில் சேர்த்து பாகு தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அடி கனமுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து பொரி, வெல்லப்பாகு சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளற வேண்டும்.
அவ்வப்போது நெய் சேர்த்து கிளறி, இறுதி தருவாயில் புட் கலர் மற்றும் ஏலக்காய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை நன்கு கிளறிக்கொண்டே இருக்க, பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் முந்திரி மற்றும் திராட்சைகளை சேர்ந்து, சிறிதளவு நெய் ஊற்றி இறக்கினால் சுவையான பொரி அல்வா தயார்.