மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உருளைக்கிழங்கில் ஆம்லெட் செய்யலாமா?.. உங்களுக்காக இதோ புது ரெசிபி..! வீட்டிலேயே செய்து அசத்துங்க..!!
உருளைக்கிழங்கு ஆம்லெட் எப்படி செய்வது என்பது பற்றி விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் - 5
முட்டை - 5
செய்முறை :
★முதலில் கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
★பின் உருளைக்கிழங்கு தோல் நீக்கி, சிறிதாக சிவி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
★ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
★அதனுடன் உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து கிளற வேண்டும்.
★இறுதியாக நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், வெண்ணை தடவி, உருளைக்கிழங்கு, முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போட்டு வேகவிட்டு திருப்பி எடுத்து பரிமாறினால் உருளைக்கிழங்கு தயாராகிவிடும்.