சிம்பிளாக திருமணத்தை முடித்த பிக்பாஸ் விக்ரமன்.! மணப்பெண் யாரு தெரியுமா?? வைரலாகும் புகைப்படங்கள்!!
அச்சச்சோ... பீர் குடிப்பதால் இவ்வளவு பிரச்சனையா..! மது பிரியர்களே உஷார்.!!
"குடி, குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்" என, எல்லா தமிழக 'டாஸ்மாக்' கடைகளிலும் எழுதி வைத்துள்ளனர். மேலும், திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மது குடிப்பது போல காட்சிவந்தால் உடனடியாக "குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு" என்ற வார்னிங் கார்டை போடுவார்கள்.
ஆனால் தற்போது மது குடிப்பது சமூக அந்தஸ்து என நினைத்து பல இளைஞர்கள் மதுவினால் தங்களது வளர்ச்சி பாதையை இழந்து, எதிர்காலத்தை சீரழித்து கொண்டுள்ளனர். மதுவுக்கு எதிராக பலர் குரல் எழுப்பியும் தற்போதுவரை மதுவை ஒழிக்க முடியவில்லை. மதுவினால் பலரது குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் சூழல் வந்துவிட்டது.
அதிலும் பீர் குடிப்பதால் நீ குடிகாரன் கிடையாதுடா மச்சி... பீர் சாப்பிட்டா நல்லது தாண்டா மச்சி...போன்ற நண்பர்களின் அறிவுரைகளை கேட்டு பீர் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து, தற்போது முழு நேர குடிகாரர்கள் ஆன பலர் உள்ளனர். ஆனால் பீர் சாப்பிட்டால் மிகப்பெரிய ஆபத்து என்ற தகவல் வெளியாகி உள்ளது.
#சர்வதேசசெய்திகள் | ஒரு நாளைக்கு 2 பீர் எடுத்துக் கொண்டால்...#SunNews | #Beer | #SayNoToAlcohol pic.twitter.com/l4cD17j7nR
— Sun News (@sunnewstamil) March 11, 2022
லண்டனை சேர்ந்த Nature Communications 36 ஆயிரத்திற்கும் அதிகமான MRI ஸ்கேன் முடிவுகளை ஆராய்ந்து நடத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு 2 பீர் எடுத்துக்கொண்டால் 10 ஆண்டுகள் வயது மூப்பிற்கு சமமாக மூளை பாதிப்படையும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. எனவே மதுபிரியர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.