கேன்சர் பெண்களை அதிகம் பாதிக்க காரணம் என்ன தெரியுமா.?
சமீபத்தில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு நடத்திய ஆய்வில், புற்று நோய்க்கு காரணமான ரசாயனங்கள் பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. பி எப் ஏ எஸ் ரசாயனங்கள் பெண்களின் ஹார்மோன் செயல்பாட்டை சீர்குலைப்பதாக தெரிய வந்துaள்ளது.
2005 முதல் 2018 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின் பங்கேற்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் மற்றும் சிறுநீரை வைத்து இந்த ஆய்வை செய்துள்ளனர்.
மவுத் வாஷ், கறைகளை போக்கும் ரசாயனங்கள், துப்புரவு பொருட்கள், வண்ணப்பூச்சுக்கள், அழகு சாதனப் பொருட்கள் இவற்றில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோய்க்கு காரணிகளாகின்றன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆனால், இந்த அதிகளவில் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் தான் புற்றுநோய்க்கு காரணிகளாகின்றன என்று முழுவதும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.