கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
மதிய நேரத்தில் அதிகமாக தூக்கம் வருகிறதா.. என்ன காரணம் தெரியுமா.?
பெரும்பாலும் மதிய உணவு உண்ட பிறகு எல்லோருக்கும் தூக்கம் வரும். அலுவலகத்தில் கூட சிலர் மதிய உணவு உண்டவுடன் தூங்கி விடுவார்கள். மதியம் சிறிது நேரம் தூங்கினால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும். மதிய உணவுக்குப்பிறகு தூக்கம் மிக அவசியம் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இதுகுறித்து ஆய்வு செய்துள்ள அமெரிக்க தேசிய தூக்க அறக்கட்டளை, "மனிதன் ஒரு நாளில் தினமும் இரண்டு முறை தூங்குகிறான். காலை 2 மணி முதல் 7 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் தூக்கம் வரும். இதில் காலை நேரத்தில் எந்த பிரச்னையும் இருக்காது.
ஆனால் மதியம் தூங்கும் வாய்ப்பு எல்லோருக்கும் அமையாது. பொதுவாகவே சாப்பிட உடன் ஜீரணிக்கும் வேலையை உடல் மேற்கொள்வதால், அந்த நேரத்தில் உடல் மயக்க நிலைக்கு செல்வதால் தூக்கம் வருகிறது. இதற்கு காரணம் மெலடோனின் போன்ற ஹார்மோன்கள் தான்.
குறிப்பாக பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருப்பதால், மாதவிடாய் காலத்தில் மிகவும் சோர்வாகஇருப்பதால் தான் பெண்களுக்கு மதியம் உணவு உண்டவுடன் அதிக தூக்கம் வருகிறது. மேலும் நீரிழிவு, தைராய்டு, ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களும் மதியம் நிறைய தூங்குவார்கள்.