"நீங்க சிக்கன் பிரியரா? அப்ப இது உங்களுக்குத்தான்! இதைப் படிங்க!"



Recipe for chicken

நம்மில் பெரும்பாலானோர் உடல் பருமன் பிரச்சினையினால் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் எடையைக் குறைக்க உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மிகவும் முக்கியம். மேலும் அசைவம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

chicken

ஆனால் உண்மையில், அசைவத்தில் சிக்கன் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் சிக்கனில் கொழுப்புக்கள் குறைவு. ஆனால் இதை ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிட வேண்டும். கோழிக்கறியில் ப்ரோட்டீன் அதிகம் உள்ளதால், பசி உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.

அதிலும் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் நாட்டுக்கோழியை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிலும் அதில் உள்ள சத்துக்களை முழுமையாகப் பெற வேண்டுமானால், கோழிக்கறியை நெருப்பில் வாட்டியோ, சூப்பாக தயாரித்தோ தான் உண்ணவேண்டும்.

chicken

எக்காரணம் கொண்டும் எண்ணையில் பொறித்த சிக்கனை உண்ணக் கூடாது. ஏனென்றால் எண்ணையில் பொறித்த சிக்கனில் கலோரிகள் அளவுக்கு அதிகமாக இருக்கும். மேலும் எண்ணையில் பொரிப்பதால் கெட்ட கொழுப்பு உடலில் அதிகரிக்கும்.