#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மார்பில் உள்ள சளியை ஒரே நாளில் கரைத்து வெளியேற்றும் மேஜிக் ட்ரிங்க்.! எப்படி செய்யலாம்.!?
பொதுவாக சளி என்பது நம் நுரையீரல் பகுதியில் குறிப்பிட்ட அளவு எப்போதும் இருக்கும். ஆனால் இந்த சளி நம் நுரையீரலில் அதிகமாகிவிட்டால் நம் உடலில் பல பாதிப்புகளை தருகிறது. மேலும் இந்த சளி நம் உடலில் வந்து விட்டால் அது குணமாக நீண்ட நாட்கள் ஆகும். இதற்கு ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் பல பக்க விளைவுகளை தருவதோடு, குணமாவதற்கும் நீண்ட நாட்கள் ஆகின்றது.
மேலும் இந்த சளி பாதிப்பு நம் உடலில் அதிகமானால் மூச்சு விட சிரமப்படுவது, தலைவலி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளும் இருந்து வருகின்றன. இதனால் பல அசௌகரியங்களும் ஏற்படுகிறது. இந்த சளியை வீட்டு வைத்திய முறைப்படி எளிதாக பக்க விளைவுகளின்றி குணப்படுத்தலாம். அவை எப்படி என்பதை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மிளகு, திப்பிலி, வெற்றிலை கற்பூரவள்ளி இலை, துளசி, தேன், பனங்கற்கண்டு
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சுட வைத்து அதில் மிளகு, திப்பிலி, வெற்றிலை, கற்பூரவள்ளி இலை, துளசி, பனங்கற்கண்டு போன்றவற்றை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதை வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்து வைத்துக்கொண்டு அதில் தேன் ஊற்றி மிதமான சூட்டில் தினமும் காலை மற்றும் இரவில் குடித்து வந்தால் மார்பு மற்றும் நுரையீரல் பகுதியில் உள்ள சளி கரைந்து வெளியேறிவிடும். இந்த மேஜிக் பானத்தை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடித்து வந்தால் சளி தொல்லையே இருக்காது.