மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மென்மையான சருமத்தை பெற வேண்டுமா.? வாங்க என்ன செய்யலாம்னு பாக்கலாம்.!
பொதுவாகவே ஆண், பெண் என இருபாலரும் எதிர்கொள்ளும் சரும பிரச்சனை தான் முகப்பரு. இவை முகத்தில் வந்த சில நாட்களில் தானாகவே மறைந்து விடும். ஆனால் சில பருக்கள் சீழ் நிரம்பிய பருக்களாகவும், கரும்புள்ளிகளாகவும் மாறி தோற்றத்தைக் கெடுப்பதோடு வலியையும் ஏற்படுத்தலாம்.
இந்த பருக்களை நீக்குவது எப்படி என்று இங்கு பார்க்கலாம். முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணையைப் போக்க லேசான கிளென்சர் கொண்டு முகத்தை மெதுவாக கழுவ வேண்டும். சுத்தமான சருமத்தில் பாக்டீரியாக்கள் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு.
மேலும் ஒரு ஐஸ் கியூபை சுத்தமான துணியில் சுற்றி பருக்கள் மீது சில நிமிடங்கள் தடவினால் வீக்கம் மற்றும் வலி குறையும். மேலும் ஒரு சிட்டிகை மஞ்சளை சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல செய்து முகப்பருவில் தடவி, 15 நிமிடங்களில் கழுவினால், பருக்கள் வேகமாக குணமாகும்.
ஆளுவேரா ஜெல்லை பருக்கள் மீது தடவி 30நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், பருக்கள் வேகமாக மறைந்து விடும். இது ஒரு குளிர்ச்சியான பண்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் எலுமிச்சை சாறை பஞ்சால் பருக்கள் மீது தடவ வேண்டும். இது ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது.