"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
இவ்வளவு நாளாக இது தெரியாம போச்சே... மீதமான சாதத்தை வைத்து சுவையான பாயாசம் செய்வது எப்படி.?
சாதம் மீதம் ஆகிவிட்டது என்ற கவலை இனி வேண்டாம். மீதமான சாதத்தை வைத்து சுவையான பாயாசம் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நெய் – 2 டீஸ்பூன்,
சர்க்கரை – 3/4 கப்,
தண்ணீர் – 1 கப்,
பால் – ஒரு கப்,
மீதமான சாதம் – ஒரு கப், ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்.
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு நெய் சேர்த்து சூடானது அதில் முக்கால் கப் சர்க்கரையை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கரைந்து பொன்னிறமாக மாறி கெட்டியான பதத்திற்கு வந்ததும் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் கெட்டியான பால் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
இந்த கலவைகள் அனைத்தும் நன்கு கொதித்து வரும் சமயத்தில் அதனுடன் மீதமான சாதம் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். தற்போது சுவையான பாயாசம் தயார்.