தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பொதுமக்களே உஷார்.. மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்?
தென்னிந்தியாவில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் மிக்ஜாம் என்ற புயல் உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழக மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சென்னை ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம். மழைக்காலங்களில் மின்கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள் மற்றும் மின்சார கேபிள்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் கைகள் ஈரத்துடன் இருக்கும் போது மின்சார சாதனங்களை இயக்கவோ, சுவிட்ச் ஆன் செய்யவும் கூடாது.
குறிப்பாக கீழே தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார கம்பிகளின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். மின்சார கசிவு மற்றும் மின் அதிர்ச்சி ஏற்பட வாய்ப்பு இருந்தால் கூட மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.