மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி தகவல்! ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்ப்பவர்களை கண்கானிக்கும் முன்னனி நிறுவனங்கள்
கூகுள், பேஸ்புக், oracle ஆகிய நிறுவனங்கள் ப்ரத்யேகமான டிராக்கர்களை பயன்படுத்தி ஆன்லைனில் ஆபாச வீடியோக்களை பார்க்கும் தங்களது பயனாளர்களின் தகவல்களை சேகரித்து வருகிறதாம்.
மைக்ரோசாப்ட், கார்னி மிலான், பெனிசில்வேனியா பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இணைந்து webXray என்ற டூலை உருவாக்கியுள்ளனர். இந்த கருவியானது வலைதளங்களில் உளவு பார்ப்பவர்களை கண்டறிவதாகும்.
இதனை பயன்படுத்தி 22,484 ஆபாச வலைதளங்களை சோதனை செய்துள்ளனர். அப்போது 93 சதவிகித வலைதளங்கள் மூன்றாம் தர நிறுவனத்தால் கண்காணிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கூகுள் 74 சதவிகிதமும், oracle 24, பேஸ்புக் 10 சதவிகித வலைதளங்களையும் கண்காணிக்கின்றன.
இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் எந்த வலைதளத்தில் என்றைக்கு எந்த வீடியோவை பார்த்துள்ளார்கள் என்ற தகவல் அவர்களால் சேகரிக்கப்பட்டு வருகிறது. எ.கா. பேஸ்புக் அக்கவுண்டினை மொபைலில் லாகின் செய்துவிட்டு நீங்கள் மற்ற வலைதளங்களில் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதை தான் அவர்கள் கண்காணிக்கிறார்கள்.
இதில் மிகவும் அதிர்ச்சியான தகவல் என்னவெனில் இன்காக்னிட்டோ மோட் எனப்படும் ப்ரைவேட் விண்டோவில் பார்க்கும் வடியோக்களின் தகவல்களும் சேமிக்கப்படுவது தான். பயனாளர்களுக்கு மட்டுமே அதில் இருக்கும் ஹிஸ்டரி தானாக அழிக்கப்படுகிறது. ஆனால் பின்னால் இருந்து அவர்கள் எல்லா தகவல்களையும் சேகரித்து கொண்டு தான் உள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், இந்த தகவல்களை வைத்து மார்க்கெட்டிங் செய்வது எங்கள் நோக்கமல்ல. எங்கள் பயனாளர்கள் பார்க்கும் ஆபாச வலைதளங்களின் பக்கங்கள் எங்களுடைய பக்கங்களில் பகிர்ந்துவிடாமல் பாதுகாப்பதற்கே. மேலும் எங்கள் வலைதளங்களில் ஆபாச காட்சிகளை கொண்ட விளம்பரங்களை தடை செய்யவும் மட்டுமே என விளக்கமளித்துள்ளனர்.