மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சம்மர் வெயிலுக்கு ஜில்லுனு காபி மில்க் ஷேக் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!!
காபி அருமையான பானம் ஆகும். அதன் நறுமணமும் புத்துணர்வை தரும் சுவையும் அனைவரையும் ஈர்க்கும். சில நபர்கள் ஒரு நாளைக்கு 10 முதல் 15 காபி குடித்துக் கொண்டே இருப்பார்கள். இந்தக் கோடை காலத்தில் இது போன்ற காபில அவர்களுக்கு காபியின் நறுமணம் மற்றும் சுவையில் சத்து நிறைந்த காபி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்: 1 கப் கொட்டை இல்லாத பேரிச்சம்பழம், 8 டீஸ்பூன் காபி பவுடர், 5 கப் பால், 3 ஏலக்காய், 3 டீஸ்பூன் சர்க்கரை, 3/4 கப் பிரஸ் கிரீம், ஐஸ் கட்டிகள் தேவையான அளவு.
செய்முறை: 1 கப் பேரிச்சம்பழம் கொட்டைகளை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் காபி பவுடரை போட்டு கலக்கவும்.பின்பு அதனுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காயை பொடித்து சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை நன்றாக கரைந்த உடன் அதனை தனியாக எடுத்து வைத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும்.
பிறகு பேரிச்சம் பழத்துடன் பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் கலந்து வைத்துள்ள காபி டிகாஷன் ஐஸ் கட்டிகள் பிரஷ் கிரீம் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த பின்னர் உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கப்பில் அரைத்து வைத்துள்ளதை ஊற்றி மேலே சிறிதளவு காபி பவுடரை தூவி பரிமாறினால் சுவையான காபி மில்க் ஷேக் தயார்.