சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
கோடை காலத்தில் எளிமையான மற்றும் சுவையான மட்டன் உப்புக்கறி ரெஸிபி.!!
கோடை காலத்தில் கிச்சனுக்கு சென்று சமைப்பது என்றாலே எரிச்சலாக இருக்கும். இந்த நேரத்தில் அதிக மசாலா இல்லாமல் சிம்பிளாகவும் சுவையாகவும் மட்டன் உப்புக்கறி செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்: 1/4 கிலோ மட்டன், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் சோம்பு, 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 20 சின்ன வெங்காயம், 10 காய்ந்த மிளகாய், சிறிதளவு கொத்தமல்லி, சிறிதளவு கறிவேப்பிலை இலைகள்
செய்முறை: முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நிறைய சேர்த்து சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும் பிறகு காய்ந்த மிளகாய் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்பு மட்டனை சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் எண்ணெயிலேயே மட்டனை நன்றாக வதக்க வேண்டும். மஞ்சள் தூள் சேர்த்து மட்டனை நன்றாக பிரட்டி எடுக்கவும். இடையிடையே மட்டனை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். 30 நிமிடங்கள் எண்ணையிலேயே பிரட்டி மட்டன் நன்றாக வெந்தவுடன் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான மட்டன் உப்பு கறி தயார்.