புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? கண்டிப்பாக உங்களுக்கு இந்த பிரச்சனை காத்திருக்கிறது!



smoking-and-drinking-habit-issues


சிகரெட்டில் மொத்தம் 7,000 இரசாயணங்கள் இருக்கின்றன. அதில் 69 இரசாயணங்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. ஒருவர் வெளியிடும் சிகரெட் புகை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் காற்றில் கலந்து உலாவருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

அதை சுவாசிக்கும் மக்கள் நுரையீரல் புற்றுநோய், தொடர்ந்து மூச்சு விடுவதில் சிக்கல், நுரையீரல் செயலிழத்தல் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புகைப்பழக்கம் உள்ளவர்கள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌‌ள்வது நல்லதாகும்.

ஒருநாளைக்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு ‌சி‌க்கலாகு‌ம் எ‌ன்று‌ சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். புகைப்பழக்கம் அதிகம் உள்ளவர்கள் தாம்ப‌த்‌திய உற‌வி‌ன் போது சிரமப்படுவார்கள். துணைவியை திருப்தி படுத்த இயலாது. தாம்ப‌த்‌திய உற‌வி‌ன் போது அதிக அளவில் மூச்சுத்திணறல் வரும்.

drinking alcohol

புகை‌ப் ‌பிடி‌ப்பதை‌ப் போ‌ன்று மது அரு‌ந்துவது‌ம் தாம்பத்திய வாழ்க்கையில் சி‌க்க‌ல்களை உருவாக்கும் எ‌ன்று‌ சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். நீண்ட காலத்திற்கு மதுவைத் தவறாகப் பயன்படுத்தினால் பல வகையான மன நல பாதிப்புகளுக்கு ஆளாகலாம். இது தொடர்ந்தால், அதன் காரணமாக நீண்ட-கால பாதிப்புகள் உடலில் நச்சுத் தன்மையைக் கூட்டுவதோடு, மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கும். அதனால் உளவியல் ரீதியாக மனநிலை அதிகப்படியாக பாதிக்கப்படலாம்.

புகையிலை பழக்கத்தால், ஆண்டுக்கு, 60 லட்சம் பேர் பாதிக்கின்றனர். அதில், 30 லட்சம் பேர் நேரடியாக புகைப்பவர்கள். பொதுஇடத்தில் புகைபிடிப்பதால், மற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். வீட்டில் புகைப்பிடிப்பதால், 40 சதவீத குழந்தைகள் பாதிப்படைகின்றனர். நுரையீரல் புற்று நோயால் இறப்பவர்களில், 80 சதவீதம் பேர் புகையிலை பழக்கத்தால் இறப்பவர்களாக உள்ளனர்.