மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி ஒரு மனைவி கிடைத்தால் உண்மையாலுமே அந்த கணவர் பாக்கியசாலி.!
பெற்ற பிள்ளைகள் வளர்ந்ததும், பெற்றோரைப் பாதுகாக்க வேண்டும் என்பது சட்டமல்ல. ஆனால் மனிதாபிமான அடிப்படையிலாவது ஒரு கடமையுணர்வு. விலங்கினத்திற்கும், மனிதர்களுக்கும் வேறுபாடு காட்டுவதே வயது முதிர்ந்த பெற்றோரைப் பாதுகாக்கும் நற்பண்பு ஆகும். ஆனால் இந்த பண்பு பலரிடையே குறைந்து வருகிறது.
படிப்பை முடித்துவிட்டு அயல்நாடு செல்லும் பிள்ளைகள் பலர் தற்போது பெற்றோர்களை கண்டுகொள்ளாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல இந்திய பிள்ளைகள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் தவிக்க விடுகின்றனர். தான் பட்ட கஷ்டங்களை தன் பிள்ளைகள் அனுபவிக்க கூடாது என நினைத்து, பெற்றோர்கள் அனுபவிக்கவேண்டியவற்றை குழந்தைகளுக்காக தவிர்த்து கஷ்டப்பட்டு தன் பிள்ளைகளை எப்படியாவது உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லவேண்டும் என நினைத்து வளர்க்கும் பல தந்தைகள் நம் இந்திய நாட்டில் இருந்துள்ளனர். இருந்துகொண்டும் இருக்கின்றனர்.
ஆனால் அவ்வாறு வளர்த்த பெற்றோர்களை, தனக்கு வசதி வாய்ப்பு வந்ததும் பெற்றோர்களை கண்டுகொள்ளாமல் சென்றுவிடும் பிள்ளைகளும் நம் நாட்டில் அதிகம் உள்ளனர். தற்போது பலருக்கும் அதிர்ஷ்டமான மனைவி கிடைப்பது பாக்கியம் தான். தன்னை பெற்றெடுத்து வளர்த்தது போல தான் தன் கணவனையும் அவரது பெற்றோர்கள் கஷ்டப்பட்டு வளர்த்திருப்பார்கள். எனவே "உங்களை பெற்றுவளர்த்து என்னிடம் தந்த அவர்களும் என் பெற்றோர்தான்" என கூறும் மனைவி கிடைத்தால் அந்த கணவன் பாக்கியசாலி என்றே கூறலாம்.
ஆனால் தற்போதைய வாழ்க்கை முறையில் ஒரு சில பெண்கள், மாமனார்-மாமியார் தங்களுக்கு ஒரு தொந்தரவு என நினைத்தே கணவனுடன் தனிக்குடித்தனம் செல்கிறார்கள். ஆனால் தங்களுது பிள்ளைகளும் தங்களை இவ்வாறு தவிக்கவிட்டுவிடுவார்களே என்ற எண்ணம் வேண்டும். வயது முதிர்ந்த பெற்றோர்கள் இளம் குழந்தைகளுக்குச்சமம். குழந்தைகள் பிடிவாதம் செய்தால் எப்படி சகித்துகொள்கிறோமோ அதேபோல் தான் வீட்டில் உள்ள முதியவர்களும்.
தற்போது வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்தியாவிலிருந்து இளைஞர் ஒருவர் அயல் நாட்டிற்கு சென்று பத்து வருடங்களாக வசித்து வருகிறார். ஆனால் அவரை பெற்றெடுத்த தாய் இந்தியாவில் தனியாக வசித்து வருகிறார். பத்து வருடங்களாக அந்த இளைஞர் தாய்க்கு பணமும் அனுப்புவதில்லை, தொலைபேசியில் தொடர்புகொண்டும் பேசுவதில்லை என ஒருவரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நபர் அந்த இளைஞரை அயல்நாட்டிற்கு சென்று பார்த்தபோது அந்த இளைஞன் தனது மனைவி குடும்பத்திற்கு வீடுகட்டி கொடுத்து அவர்களை மட்டுமே கவனித்து வந்துள்ளார் அந்த இளைஞர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த முதியவர் அந்த இளைஞரையும், அவரது மனைவியையும் சரமாரியாக திட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.