சாம்பார் உணவுக்கு சாம்பார் என்று பெயர் வந்தது எப்படி தெரியுமா?



south indian food sampar

மராட்டியத்தில் ஆண்ட மன்னர் சாம்பாஜி நினைவாக வைக்கப்பட்ட பெயர் நாளடைவில் சாம்பார் என்று மருவி வந்துள்ளது என்றும், அவர் பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மகனும் ஆவார் என்று பிரபல சமையல் கலைஞர் குனல் கபூர் தெரிவித்துள்ளார்.

சாம்பார் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. என்னதான் அசைவம் சாப்பிட்டாலும் ஒரு மாற்றத்திற்காக சாம்பார் சாதம் சாப்பிடுவோர் எண்ணிக்கை பெரும்பாலும் உண்டு. அதிலும் அசைவம் தவிர்ப்பவர்களுக்கு பிரதான உணவே சாம்பார் தான். ஆனால் சாம்பார் என்பது தென்னிந்திய உணவு கிடையாது என்று சமையற் கலைஞர் குனல் கபூர் தெரிவித்துள்ளார்.

Tamil Spark

சமையல் போட்டியான "மாஸ்டர்செஃப்ல்" நடுவராக இருந்த இவர், கறிகளை மையமாகவைத்து இந்தியாவில் சமைக்கப்படும் உணவிற்காக புதிய டிவி நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதில், சாம்பார் செய்துகாண்பித்த குனல் கபூர், சாம்பார் முதல் முதலாக மராட்டியர்களால் தான் சமைக்கப்பட்டது. ஆனால் அனைவரும் தென் இந்திய உணவு என்றே சொல்லி கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி. சிவாஜிக்கு பிறகு இவர் ஆண்ட சமயத்தில் அங்கு சாம்பார் உணவு முதன் முதலில் சமைக்கப்பட்டது. சமைத்த அந்த உணவிற்கு தங்களுடைய அரசரின் பெயரை வைத்துள்ளார்கள். அது காலப்போக்கில் சாம்பார் என்று மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.