மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முழு தவளையை அப்படியே உயிருடன் விழுங்கும் அதிசய சிலந்தி பூச்சி! வைரல் வீடியோ.
சிலந்தி ஒன்று முழு தவளையை அப்படியே உயிருடன் விழுங்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
பொதுவாக தவளைகள்தான் பூச்சி, சிரியவகை உயிரினங்களை விழுங்குவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் சிலந்தி ஒன்று முழு தவளையை அப்படியே விழுங்கும் காட்சி பார்ப்போரை சற்று பிராமிப்படைய செய்கிறது. மேற்குவங்க மாநிலம் ஜல்பாய்குரி பகுதியை சேர்ந்த சுஜய் ஷா என்பவர் தனது வீட்டின் கழிவறைக்குள் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த சிலந்தி ஒன்று தவளை ஒன்றை விழுங்குவதை பார்த்த சுஜய் ஷா அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அந்த காட்சியை உடனே வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட, அந்த காட்சியை பார்த்த பலரும் வியந்து போனார்கள்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானநிலையில் இந்த சிலந்தி குறித்த தகவல்களை வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஹண்ட்ஸ்மேன் என பெயர் காந்த இந்த சிலந்தியானது ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் எனவும், இவை உருவத்தில் சிரியவகை தவளை, பூச்சி, பறவைகள், பல்லி மற்றும் பாம்புகளை உணவாக உட்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளனர்.