மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
50 வயதிலும் 25 வயது மாதிரி தெரியனுமா?.. சுவையான முளைகட்டிய பயிர் சூப்..! இனிமே தினமும் சாப்பிடுங்கள்..!!
உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் முளைகட்டிய பயிரை சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சருமத்துக்கு புத்துணர்வு அளிக்கும். இன்று முளைகட்டிய பயிர் சூப் செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள் :
முளைகட்டிய பயிறு - 1 கப்
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு மற்றும் மிளகுத்தூள் - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட முளைகட்டிய பயிரை நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிதளவு பயிரை மட்டும் தனியாக எடுத்து வைத்து மீதமுள்ள பயிரை தண்ணீருடன் சேர்த்து அரைத்திட வேண்டும்.
★பின் அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதனுடன் அரைத்து வைத்த பயிரை சேர்த்து கொதிவிட்டு இறக்க வேண்டும்.
★இறக்கும் தருவாயில் மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான சூப் தயார்.