திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கார்த்திகை தீபத்தன்று இதை செய்து சாப்பிட்டு பாருங்கள்.! ஆஹா என்ன ருசி.!
கார்த்திகை தீபம் ஸ்பெஷலான இனிப்பு அப்பம் அதிகளவில் எண்ணெய் குடிக்காமல், மிருதுவாக எப்படி செய்யலாம் என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
வெல்லம் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
வாழைப்பழம் - 1
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
உருட்டு உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பச்சரிசி - 1 கப்
செய்முறை :
முதலில் அடுப்பை பற்ற வைத்து கடாயை அதில் வைத்து, கடாய் சூடானவுடன் வெல்லத்தைப் போட்டு, 1/4 கப் தண்ணீரை ஊற்றி நன்றாக கரைக்க வேண்டும். அடுப்பை நிறுத்திவிட்டு பின்பு நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பு, உளுந்து, பச்சரிசி உள்ளிட்ட மூன்றையும் 2 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு ஊற வைத்த தண்ணீரை தனியாக வடிகட்டி அதனை மிக்ஸியில் போட்டு அதில் 1/4 கப் ஊறவைத்த தண்ணீரை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக அரைத்து வைத்துள்ள மாவில் நன்றாக கனிந்த வாழைப்பழம் 2 டீஸ்பூன் உப்பு, 1/4 டீஸ்பூன் ஏலக்காய் பொடி, துருவிய தேங்காய் 1/2 கப் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு வடிகட்டியை பயன்படுத்தி மாவில் கரைத்து வைத்துள்ள வெல்லத்தையும் சேர்க்கவும். இப்போது மறுபடியும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியிலிருக்கும் இந்த மாவை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி, அந்த மாவை 2 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
தற்போது மீண்டும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன், 1 டீஸ்பூன் மாவை எடுத்து எண்ணெயில் அப்படியே விட்டு விடவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அப்பம் எண்ணெய் மேல் மிதந்து வரும்போது, 2 பக்கமும் திருப்பிப் போட்டு நன்றாக வந்த பின்னர் எடுத்தால், சுவையான கார்த்திகை அப்பம் தயாராகிவிடும்.