குட்டீஸ் ஸ்பெஷல்: குழந்தைகள் விரும்பும் மாலை நேர ப்ரெட் ரோல்.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!



sweet-bread-roll-recipe-for-childrens

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க, சுவையான ப்ரெட் ரோல் எவ்வாறு செய்வது என்பது பற்றி தற்போது காண்போம்.

தேவையான பொருட்கள் :

முழுபிரெட் - 1
ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி
கேரட் துருவல் - 3 தேக்கரண்டி
நெய் - தேவைக்கேற்ப
பொடியாக்கிய வெல்லம் - முக்கால் கப்
தேங்காய்த் துருவல் - அரை கப்

Sweet

செய்முறை :

★முதலில் கடலைப்பருப்பை நன்கு வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

★அடுத்து ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, கேரட் துருவலை ஈரப்பதம் போக வதக்கி, அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்க வேண்டும்.

★அடுத்து ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி வெல்லம் ஆகியவற்றை சேர்த்து வெல்லம் இளகியதும், அதனுடன் கடலைப்பருப்பை சேர்த்து கிளற வேண்டும்.

★பின் பிரெட்டை நீளவாக்கில் நறுக்கி, ஓரம் நீக்கி, தண்ணீரில் நனைத்த பின் ஒரு துணியை வைத்து தண்ணீர் முழுமையாக நீங்கியதும் கடலைப்பருப்பு கலவையை நடுவில் வைத்து சுருட்ட வேண்டும்.

★இறுதியாக தோசைக்கல்லில் சிறிதளவு நெய் விட்டு நான்கு பக்கமும் திருப்பி போட்டு டோஸ்ட் செய்தால் சுவையான பிரட் ரோல் தயாராகிவிடும்.