மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு!" குளிர் காலத்திற்கு ஏற்றது!
உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஏராளமான சத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது. குளிர்காலத்தில் சூடாக வைத்திருக்க உதவுவதுடன், நோயெதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கிறது. இது அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
இதிலுள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் பசி உணர்வைக் குறைத்து உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கிறது.
இதிலுள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் பொட்டாசியம் ஏராளமாக உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் கெட்ட கொலெஸ்ட்ராலின் அளவைக் குறைத்து இதய நோயைத் தடுக்கிறது.
குறிப்பாக குளிர் காலங்களில் இதன் வரத்து அதிகமாக இருக்கும். எனவே நாம் குளிர் காலங்களில் இந்தக் கிழங்கை சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஆயினும் குறைந்த அளவு மட்டுமே இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை உட்கொள்ளவேண்டும்.