மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீன் உண்ணும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..
உலகின் பெரும் உணவு தேவையை தீர்ப்பது 'கடல் உணவுகள் 'ஆகும். அசைவ பிரியர்கள் எவரும் மீன்களை அவ்வளவு எளிதில் ஒதுக்கி வைத்து விடமாட்டார்கள். மீன் உண்பதற்கு மட்டும் ருசியாக இருப்பதில்லை அதே போல அதில் உள்ள புரதம், ஓமேகா 3 மற்றும் கொழுப்புகள் நம் உடலுக்கு இன்றியமையாததாகும்.
அவ்வாறான மீனில் ஏகப்பட்ட மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. பெரும்பாலான மருத்துவர்கள் கண்டிப்பாக மீனை பரிந்துரைப்பார்கள். மேலும் மீனில் சிலவகையான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவுகள் மக்களுக்கு மிக எளிதாக கிடைத்து விடுகின்றன.
இவ்வாறாக நாம் மீன்களை உண்ணும் போது சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் மீன்களுடன் மற்ற புரத உணவுகளான மற்ற மாமிசங்களையும் அல்லது பருப்பு ,உளுந்து போன்ற உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது செரிமானத்தை இன்னும் கடினமாக்கும். மேலும் பால் பொருட்களை தவிர்ப்பது மிகவும் நல்லது ஏனெனில் அதில் உள்ள அமிலங்கள் வயிற்றில் உபாதைகளை ஏற்படுத்தும் .ஆதலால் மீன் உண்ணும் போது கவனத்துடன் இருந்தால் நமது உடல் நலம் பேனப்படும்.