மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லஞ்ச் பாக்ஸ்க்கு சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த கொண்டை கடலை சாதம் ரெசிபி.!
லஞ்ச் பாக்ஸ்க்கு விதவிதமான சாதம் உள்ளது. அதில் சாம்பார் சாதம், பருப்பு சாதம், புளி சாதம், தக்காளி சாதம் போன்றவற்றை நம்ம வழக்கமாக செஞ்சு அனுப்புவோம். அந்த வகையில நாம் இன்னைக்கு ஒரு வித்தியாசமான கொண்டைக்கடலை சாதம் எப்படி செய்யலாம்னு பாக்கலாம். கொண்டைக்கடலை சுவையானது மட்டும் இன்றி நம் உடலுக்கு தேவையான சத்துக்களையும் உள்ளடக்கியதாகும்.
தேவையான பொருட்கள் 1. .1கப் கொண்டைக்கடலை, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 பிரியாணி இலை, 1 பட்டை, 2 தக்காளி, 1 பெரிய வெங்காயம், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள், 1/2 மிளகாய்த்தூள், 1 கப் அரிசி, 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1/2 டீஸ்பூன் சோம்பு, எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: முதலில் கொண்டைக்கடலை ஒரு பவுலில் சேர்த்து 6 முதல் 7 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும். பிறகு ஊர வைத்த கொண்டைக்கடலை குக்கரில் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், பட்டை மற்றும் பிரியாணி இலை சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, உப்பு, மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அரிசியை நன்கு கழுவி சிறிது நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து கடாயில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். தண்ணீர் வற்றியதும் வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக வைத்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கொண்டைக்கடலை சாதம் தயார்.கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க