"15 நிமிஷம் போதும்.." வீடே கமகமக்க சுவையான ''ஈரல் ஃப்ரை' ரெசிபி.!



tasty-and-spicy-liver-fry-recipe

அசைவ உணவு பிரியர்களுக்கு இட்லி தோசைக்கு தொட்டுக்க அருமையான ஒரு சைட் டிஷ் இந்த ஈரல் வறுவல். 15 நிமிஷம் போதும், கமகமக்கும் வாசனையுடன் அருமையான சுவையில் ஈரல் வறுவல் எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
ஈரல் 500 கிராம், சின்ன வெங்காயம் 100 கிராம், பச்சை மிளகாய் 4, வர மிளகாய் 3, மிளகுத்தூள் 3 டேபிள் ஸ்பூன் , சோம்பு 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை:
சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிட்டு ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த ஈரலை போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகுத்தூள் 1 டீஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

Life styleஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ஈரல் கலவையை சேர்த்து கிளறவும். அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். ஈரல் 3/4 பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும்.

Life styleபின்னர் மீதமுள்ள மிளகு தூளை தூவி கரண்டி போட்டு கிளற வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும். கடைசியாக அதன் மீது கொத்தமல்லித்தழை தூவினால் காரமும், வாசமும்  கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார்.