மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுவையான செட்டிநாடு இறால் தொக்கு.! இப்படி செஞ்சு பாருங்க.! அசத்தலான ரெசிபி.!
கடல் உணவுகளில் இறால் மீன் மிகவும் சுவையானது. நாம் அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவோம். இறால் மீனை பல வகைகளில் சமைத்து இருந்தாலும் செட்டிநாடு ரயிலில் செய்யப்படும் இந்த இறால் தொக்கு மிகவும் ருசியாக இருக்கும். இந்த சுவைமிக்க இறால் தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: 250 கிராம் இறால், 2 பெரிய வெங்காயம், 1 தக்காளி, 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது, தேங்காய் எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு. இறால் தொக்கு மசாலாவிற்கு அரைக்க 1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் மிளகு, 1/2 டீஸ்பூன் மல்லி, 1/2 டீஸ்பூன் சோம்பு, 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய், 1 நட்சத்திர சோம்பு, 5 வர மிளகாய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா வாசனை போனதும் தக்காளி சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து வதக்கவும். பின் இறால் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக விடவும். இறால் வெந்து தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் நன்கு பிரட்டி விட்டு கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு இறால் தொக்கு தயார்.