மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆஹா.. காரக்குழம்பு ஸ்டைலில் சுவையான கொண்டைக்கடலை குழம்பு செய்வது எப்படி?.. இன்றே செய்து அசத்துங்க..!!
இன்று நமது பாட்டிமார்கள் வைப்பது போல் கொண்டைக்கடலையில் சுவையான காரக்குழம்பு செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை - கால் கிலோ
வெங்காயம் - 100
தக்காளி - 3
பூண்டு - 10
பச்சை மிளகாய் - 5
தேங்காய் அரை மூடி - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு - தேவையான அளவு
கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
★கொண்டைக்கடலையை இரவு ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
★குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அதன்பின் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும்.
★இவை நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து கிளறவும். தக்காளி வதங்கிய பின்னர் மஞ்சள்தூள், தனியா தூள், மிளகாய் தூள், மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து பின் நாம் ஊற வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து நன்றாக கிளறி பின் புளியை ஊற்ற வேண்டும்.
★இவை அனைத்தும் தயாரானதும் ஒரு கொதிவந்த பின்னர், அரைத்து வைத்திருக்கும் தேங்காயை ஊற்றி உப்பு சேர்த்து குக்கரில் சேர்த்து 5 விசில் வரை கொதிக்கவிட்டு பின் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான கொண்டைக்கடலை குழம்பு தயார்.