திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"வாய் மூடி பேசவும்.." எங்கு மௌனம் காப்பது சிறந்தது.? சில டிப்ஸ்.!
எதை செய்வதற்கும் கால நேரம் என்பது உண்டு. பல சமயங்களில், "அந்த சூழ்நிலையில் நான் அப்படி பேசி இருக்க வேண்டாம்", " நான் பேசாம அமைதியா இருந்திருந்தால் அந்தப் பிரச்சனையை தவிர்த்திருக்கலாமே!", "நான் சொன்ன வார்த்தைகளால் இந்த உறவே முடிஞ்சிடுச்சே!" என்றெல்லாம் பலர் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். வார்த்தைகளுக்கு பலம் அதிகம். அதை எப்பொழுது பயன்படுத்த வேண்டும், எப்பொழுது மௌனம் காக்க வேண்டும் என்பதை சரியாக கையாள தெரிந்தால், நம்மை சுற்றியுள்ள அனைவரிடமும் ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முடியும். அனைவரும் விரும்பக் கூடிய நபராகவும் நாம் இருக்க முடியும்.
நீங்கள் பேசக்கூடிய வார்த்தைகளை வைத்து தான் உங்களை எடை போடுவார்கள். ஒரு விஷயத்தைப் பற்றி அரைகுறையாக தெரிந்திருந்தாலும் அல்லது அதில் சந்தேகம் இருந்தாலும் அதைப்பற்றி உங்கள் கருத்துக்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது. மனஸ்தாபம் காரணமாக யாரேனும் நம்மை நிந்திக்க நேர்ந்தால், அப்பொழுது மௌனம் காப்பது நல்லது. பின்னாளில் அந்த சண்டைகள் சரியாக வாய்ப்பு அமையும். மாறாக உங்கள் கோபத்தை வார்த்தைகளாக வெளிப்படுத்தினால் அந்த உறவு முற்றிலுமாக முறிந்து விடும்.
உங்களிடம் ஒருவர் பேசும் பொழுது முழுமையாக பேசி முடிக்கும் வரை மௌனம் காக்கவும். அவர் பேசுவதை கவனித்த பின்பு உங்கள் கருத்துக்களை பரிமாறவும். உங்கள் கருத்துக்களும், விமர்சனங்களும் யாரையேனும் புண்படுத்துமானால், அப்போது அதனை கூறாமல் மௌனம் காப்பது நல்லது.
உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இல்லாத இடத்தில் மௌனம் காப்பது நல்லது. கடும் கோபத்தில் இருக்கும் போது நாம் கூறும் வார்த்தைகள் பிறரை காயப்படுத்தலாம். எனவே அதிக கோபத்தில் இருக்கும் போது அமைதியாக இருங்கள்.