ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
"அடடே.. பேசாமல் இருப்பதிலும் இவ்வளவு விஷயங்கள் இருக்கா.."! வாங்க தெரிந்து கொள்வோம்.!
'அவன் பிடிவாதக்காரன்', 'கள்ளூலி மங்கன்' என்றெல்லாம் யாரையேனும் குறிப்பிட நாம் கேட்டிருக்கிறோம். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் மௌனம் காப்பது, நம்மை திமிர் பிடித்தவராகவும், கர்வம் உள்ளவராகவும் காட்டக்கூடும். எப்பொழுதெல்லாம் நாம் தவறாது பேச வேண்டும் என்று அறிந்து செயல்பட வேண்டும்.
நம்முடைய வார்த்தைகள் பிறருக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுக்குமானால், அப்பொழுது கண்டிப்பாக பேசுங்கள். துவண்டு போயிருக்கும் நபருக்கு ஆறுதல் கொடுக்க முடிந்த சூழ்நிலையில் பேசுங்கள். உங்களை சுற்றி நடக்கும் அநீதிக்கு எதிராக உங்கள் குரலை பதிவு செய்யுங்கள்.
ஒருவரை ஆபத்தில் இருந்து காக்க முடியுமெனில், அங்கு மௌனம் காப்பது அறமல்ல. நீங்கள் அத்தகைய சூழ்நிலையில் கட்டாயம் பேச வேண்டும். உங்களின் ஆலோசனைக்காகவும், கருத்துக்களுக்காகவும் காத்திருப்பவர்களிடம் பேசுவதில் தவறில்லை.
அறிவு சார்ந்த விவாதங்களில், உங்கள் கருத்துக்களை கனிவாக கூறலாம். நெடுநாள் பகை உங்கள் வார்த்தையால் சரியாகும் என்றால், அப்போது உங்கள் பிடிவாதத்தை தளர்த்தி விட்டு நீங்கள் பேசலாம். உங்களின் வார்த்தைகள் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமெனில் கட்டாயம் பேசுங்கள்.