பெண்களே.! போலிக் அமிலம் உடலில் அதிகரிக்க இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்.!?
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் மாறிவரும் உணவு பழக்கங்களினாலும், அன்றாட வாழ்க்கை முறையினாலும் பலருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. குறிப்பாக பெண்களுக்கு தங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தேவையான அளவு கிடைப்பதில்லை. குறிப்பாக பெண்களின் உடலுக்கு தேவையான போலிக் அமிலம் கிடைக்க ஒரு சில உணவுகளை எடுத்து கொண்டாலே போதுமானது.
வைட்டமின் பி9 மற்றும் போலட் என்றும் இந்த போலிக் அமிலத்தை அழைத்து வருகின்றனர். டி என் ஏ சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவது மற்றும் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் வளர்ச்சி, உயிரணு வளர்ச்சி போன்றவற்றை இந்த போலிக் அமிலம் உடலில் ஏற்படுத்துகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த போலிக் அமிலத்தை மாத்திரை வடிவில் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. தற்போது போலிக் அமிலம் எந்தெந்த உணவுகளில் நிறைந்துள்ளது என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?
1. கீரைகள் - இதில் வைட்டமின்கள், தாது பொருட்கள் மற்றும் போலிக் அமிலமும் நிறைந்துள்ளதால் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது பெண்களுக்கு மிகவும் நல்லது.
2. பருப்பு வகைகள் - பருப்பு வகைகளில் புரதம், வைட்டமின்கள் மற்றும் போலிக் அமிலம் அதிகமாக காணப்படுகிறது.
3. அவகோடா - இந்த பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு தேவையான போலிக் அமிலம் முழுமையாக கிடைத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிகிறது.
4. புரோக்கோலி - ப்ரோக்கோலியை வேக வைத்து சாலட் போன்று செய்து சாப்பிட்டால் இதில் உள்ள முழுமையான வைட்டமின்கள் மற்றும் போலிக் அமிலங்கள் போன்ற சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.
இது போக சிட்ரஸ் பழங்கள், பீட்ரூட், கருப்பு பீன்ஸ், கொண்டைக்கடலை போன்றவற்றிலும் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்துள்ளதால் இதை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்வது பெண்களுக்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.