மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, இதை பாலில் கலந்து குடித்துப் பாருங்கள்.!?
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் மாறிவரும் உணவு பழக்கங்களினாலும், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையினாலும் பல வகையான நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதில் குறிப்பாக பலருக்கும் நீரிழிவு பிரச்சனை என்பது அதிகமாகி வருகிறது. இந்த நீரிழிவு பிரச்சனையை சரி செய்ய பலவிதமான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும் கட்டுப்பாடான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றின் மூலமே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு பிரச்சினையை கட்டுக்குள் வைக்கலாம். மேலும் ஒரு சில விதைகளை பாலில் கலந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உடனடியாக கட்டுக்குள் வரும் என்று சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதைக் குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆளி விதை, சியா விதை, வெந்தயம், நாவல் விதை
செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மேலே குறிப்பிட்ட பொருட்களை லேசாக வறுத்துக் கொள்ளவும். பின்பு ஆறியதும் இதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து காற்று போகாத பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனை பாலில் கலந்து தினமும் காலை அல்லது இரவில் குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு உடனடியாக கட்டுக்குள் வரும்.
சியா மற்றும் ஆளி விதையில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வெந்தயம் மற்றும் நாவல் விதையில் நார்ச்சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை பாலில் சர்க்கரை சேர்க்காமல் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.