மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மஞ்சள் பற்கள் பளிச்சென்று மின்னுவதற்கு இந்த குறிப்புகளை ட்ரை பண்ணி பாருங்க.!?
நம்மில் பலருக்கும் பற்கள் மஞ்சள் நிறத்தில், கரையுடன் இருப்பது தன்னம்பிக்கையை குறைக்கும் விதமாக உள்ளது. பொதுவாக பற்கள் நம் முகத்தின் அழகை காட்டுகிறது என்பதால் பற்கள் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதே பலருக்கும் ஆசையாக இருந்து வருகிறது. மஞ்சள் நிற பற்களை எவ்வாறு வெள்ளையாக மாற்றலாம் என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
1. பேக்கிங் சோடா - வாரத்திற்கு ஒரு முறை பேக்கிங் சோடா உபயோகித்து பல் துலக்கி வந்தால் பற்களில் உள்ள கரைகள் நீங்கி பற்கள் பளிச்சென்று மின்னும்.
2. ஸ்ட்ராபெரி - ஸ்ட்ராபெரிகளை அரைத்து பல்துலக்கிய பின்பு பற்களில் வைத்து தேயித்து வர வேண்டும். இதில் உள்ள ஒரு வகையான அமிலம் பற்களை வெள்ளையாக மாற்ற செய்யும்.
3. ஆரஞ்சு தோல் - வாரத்திற்கு ஒருமுறை ஆரஞ்சு தோல் வைத்து பற்களில் தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கரைகள் நீங்கும். வாயையும் புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கும்.
4. உப்பு - வாரத்திற்கு ஒருமுறை சிறிது உப்பு உபயோகித்து பல் துலக்கி வர பற்களில் உள்ள கரைகள் நீங்கி பற்கள் பளிச்சென்று இருக்கும். மேலும் உப்பு உபயோகிப்பதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்க செய்கிறது. எனினும் இதை அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடாது.
5. வாழைப்பழ தோல் - வாழைப்பழத் தோலில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதை பற்களில் தேய்த்து வரும் போது பற்களில் உள்ள கரைகள் நீங்கும்.
6. வேப்பங்குச்சி - வேப்பங்குச்சியை கொண்டு பல் துலக்கும் போது பாக்டீரியாக்கள் அழிந்து பற்கள் சொத்தை ஆகாமல் இருக்க செய்கிறது.
7. சார்க்கோல் அல்லது கரி - இதை கொண்டு பல் துலக்கும் போது பற்களில் உள்ள கரைகள் நீங்குவதோடு பற்கள் மென்மையாக இருக்கச் செய்கிறது. இவ்வாறு சில குறிப்புகளை ட்ரை பண்ணாலே போதும் பற்களில் உள்ள கரைகள் எளிதாக நீங்கும்.